திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் பணி நிமிர்த்தமாக மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வகையில் இலவச பஸ்பாஸை (Free Bus Pass) காவல் ஆணையர் அவர்கள் காவல் ஆளிநர்களுக்கு வழங்கினார்கள்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணி நிமிர்த்தமாக மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய வகையில் இலவச பஸ்பாஸ் வழங்க உத்தரவிட்டிருந்தார்கள்.
அதன்பேரில், மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப அவர்கள், திருச்சி மாநகரத்தில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை இலவச பஸ்பாஸ் கிடைக்க, திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்திற்கு மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் பெயர் பட்டியலை வழங்கி, இலவச பஸ்பாஸ் பெற அறிவுறுத்தினார்கள்.
அதன்படி, திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்திடமிருந்து முதற்கட்டமாக 252 காவல் ஆளிநர்களுக்கு இலவச பஸ்பாஸ் பெறப்பட்டு, அதனை இன்று 22.01.2025-ந்தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 13 காவல் ஆளிநர்களை நேரில் வரவழைத்து, அவர்களுக்கு இலவச பஸ்பாஸை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப அவர்கள் வழங்கினார்கள்.