
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்
மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாடு பாலிடெக்னிக் முகப்பில் முத்துபாலம் இறக்கத்தில் (Automatic Number Plate Recognition) அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார். அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவின் (Automatic Number Plate Recognition) மூலம் சாலையை கடந்து செல்லும் வாகனங்களின் பதிவெண்களை துல்லியமாக பதிவு செய்து, வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோர் மற்றும் 3 நபர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணிப்பர்கள், கார்களில் சீட்பெல்ட் அணியாமல் பயணிப்பர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்ணை கண்டறிந்து வாகனத்தின் ஓட்டுநர் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளின் படி தானாக அபராதம் விதிக்கக் கூடிய திறன் கொண்டது. மேலும் இந்த கேமராவானது வெளிச்சம் இல்லாத மற்றும் இரவு நேரங்களிலும் அகச்சிவப்பு கதிர்கள் மூலம் வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து அடையாளம் காண உதவும். அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவை 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தெற்கு) மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்
