
மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற போலீசார்
கோ.புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண்ணிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளியை துணிச்சலாக துரத்தி பிடித்த கோ.புதூர் குற்றப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர் திருமதி. நிர்மலா மற்றும் தலைமை காவலர் திரு.செந்தில்பாண்டியன் ஆகிய இருவரையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார், இந்நிலையில் இன்று (17.02.2025) தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்கள் வழங்கிய பாராட்டு சான்றிதழ்களை, மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன். இ.கா.ப., அவர்களிடம் காண்பித்து வாழ்த்துக்கள் மற்றும் பாரட்டுக்களை பெற்றுச் சென்றனர்.