
ஆட்டோவில் தவறவிட்ட 15 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய கைப்பையை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு.
நேற்று 02.03.2025 மதுரை மாநகர் தவிட்டுசந்தையைச் சேர்ந்த திரு.சரவணகுமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆட்டோவில் தவிட்டுசந்தையில் ஏறி தெப்பகுளம் பகுதியில் இறங்கும்போது 15 பவுன் நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய தனது கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு இறங்கியுள்ளார். இது குறித்து தெப்பகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்நிலையில் ஆட்டோவில் பயணிகளை இறக்கி விட்ட பின் ஆட்டோவில் ஒரு கைப்பை இருப்பதை பார்த்த ஆட்டோ டிரைவர் கோச்சடை பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர் தான் ஆட்டோவில் மேற்படி பயணியை ஏற்றிய மஹால் பகுதிக்கு வந்து கைப்பையை அவரிடம் ஒப்படைப்பதற்காக வந்துள்ளார். அந்த நேரத்தில் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்ததும் நேரடியாக நகைப்பை தன்னிடம் உள்ளதை தெரிவித்து காவல் நிலையம் சென்று 15 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போன் இருந்த நகைப்பையை உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இன்று (03.03.2025) ஆட்டோ ஓட்டுநர் நாகேந்திரன் அவர்களின் நேர்மையை பாராட்டி மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு.ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி வெகுமதி அளித்து பாராட்டினார்.
