Police Department News

போதை பொருள் தடுப்பு, தென் மண்டலம் மிகச்சிறப்பு., மதுரையில் டிஜிபி அவர்கள் பாராட்டு

போதை பொருள் தடுப்பு, தென் மண்டலம் மிகச்சிறப்பு., மதுரையில் டிஜிபி அவர்கள் பாராட்டு

போதைப் பொருள் குற்ற தடுப்பு வழக்குகளில் தென்மண்டலம் சிறப்பாக பணியாற்றியுள்ளது. இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என டி.ஜி.பி., சங்கர் ஜுவல் அவர்கள் பாராட்டினார்கள்

மதுரையில் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் இளம் டி.எஸ்.பி., களுக்கு அறிவுரை வழங்கி டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அவர்கள் பேசியதாவது, பொதுவாக சட்டம் ஒழுங்கு குறித்து ஐ.ஜி., எஸ். பி., போன்றவர்களுக்கு தான் ஆய்வு நடத்துவோம், தற்பொழுது ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிரமாக புலனாய்வு செய்ய வேண்டும். புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். போதைப் பொருள் குற்ற தடுப்பு வழக்குகளில் தென்மண்டலம் சிறப்பாக பணியாற்றியுள்ளது இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் தற்பொழுது சைபர் கிரைம் அதிகரித்து வருகிறது 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்கு தான் பதிவாகும் தற்பொழுது 100 வழக்குகள் பதிவாகின்றன இது தொடர்பான புகார் வழக்குகளை எப்படி கையாளுவது என்பது குறித்து உரிய வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. காவல் துறையில் போலீசார் நலன் குறித்து கூடுதல் கவனம் செலுத்த உள்ளனர். 26 கருத்துக்கள் அடிப்படையில் கிரேடு ஒன்னு முதல் ssi வரை அவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார் தென் மண்டல ஐ.ஜி., பிரேமானந்த சின்கா, கமிஷனர் லோகநாதன், எஸ். பி., கள் அரவிந்த், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published.