
மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை
கைதிகள் செல்போன் போதை பொருட்கள் பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து மதுரை மத்திய சிறையில் மூன்று மணி நேரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார். மதுரை மத்திய சிறையில் 2500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் செல்போன் போதை பொருட்கள் எதுவும் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்த சோதனை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது அதன்படி மதுரை மத்திய சிறையில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் அவர்கள் உத்தரவின் பேரில் சிறை வளாகத்தில் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்த சோதனை நேற்று காலை நடந்தது மாநகர போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் மேற்பார்வையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் காலை 5:30 மணிக்கு சிறை வளாகத்திற்குள் சென்று அங்குள்ள கைதிகளின் அறையில் சிறை வளாகங்கள் உணவு தயாரிக்கும் பகுதிகள் கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதிரடியாக சோதனை செய்தனர் இது போல் பெண் கைதிகள் தங்கி இருந்த அறைகளிலும் இந்த சோதனையானது நடந்தது சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது இந்த சோதனையில் போதை பொருட்கள் செல்போன் உள்ளிட்டவைகள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
