
அதிரடி கஞ்சா வேட்டையில் 110 கிலோ பிடிப்பட்டது (தாம்பரம் மாநகர காவல் )
மது விலக்கு அமலாக்கபிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 08.03.2025 ம் தேதி சுமார் 08.00 மணியளவில் பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் மெயின் ரோடு பொலினேனி அபார்ட்மெண்ட் எதிரே உள்ள மைதானத்தின் புதர் அருகில் வைத்து 1,முருகுதி அப்பள நாய்டு வ/42 த/பெ கமுருகுதி நூக்கராஜு,கட்டி பந்தா கிராமம் குடுமுசாரி தாலுகா ,சின்டலபள்ளி மண்டலம் , விசாகப்பட்டினம் ஆந்திரப்பிரதேஷ்,-531111.மற்றும் 2,கெம்மேலி சத்திபாபு வ/32 த/பெ ராஜ் பாபு, எண் 2-15,ரல்ல கெட்டா கொருக்கொண்டா தாலுக்கா , விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேஷ்-531111.என்பவர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 110 கிலோ கஞ்சா மற்றும் 1 கைபேசி கைப்பற்றப்பட்டது.மேலும் இந்த கஞ்சாவினை விசாகப்பட்டினம் மாநிலத்தில் இருந்து வாங்கிவந்து பெரும்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை அதின் சுற்றுப்புறங்களில் உள்ள கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதாக கூறியதை தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.இது சம்பந்தமாக பள்ளிக்கரணை மதுவிலக்கு ,அமலாக்க பிரிவில் Cr.15/2025,u/s 8(c),20(b),29(1),NDPS ACT , வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 நபர்களை சம்மந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து 22.03.2025 வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இவ்விதமான போதைப்பொருள் வர்த்தகத்தை தடுக்கும் முயற்சியில் தாம்பரம் மாநகர காவல் துறையினர் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்த நடவடிக்கையானது தாம்பரம் காவல் நகரத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும் , போதைப்பொருள் பிடியிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் பணியில் சிறப்பாக மேற்கொள்வதின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
