
கஞ்சா விற்ற இருவர் கைது
மதுரையில் மதுவிலக்கு போலீசார் சிறப்பு எஸ்ஐ முத்துமணி தலைமையில் போலீசார் வைகை வடகரை பகுதியில் ரோந்து சென்றனர் அங்கு கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் மாவட்டம் இடுவை பாரதி புரத்தைச் சேர்ந்த சேவியர் மகன் அருண்குமார் வயது 28 என்பவரை கைது செய்தனர் இதே போல் மதுவிலக்கு எஸ்ஐ பாக்கியம் தலைமையில் போலீசார் வடக்கு வைகை ஆற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சாத்தமங்கலத்தைச் சேர்ந்த பால ஈஸ்வரன் வயது 22 என்பவரை கைது செய்தனர்
