
மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பில் மதுரை மருத்துவ கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக ஊடங்களின் அபாயங்கள் பற்றி விழிப்புணர்வு
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில், பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் சமூக ஊடக அபாயங்களில் இருந்து பெண்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், பெண் காவலர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
