
கஞ்சாவுடன் வாலிபர் கைது
மதுரையில் மதிச்சியம் போலீஸ் எஸ்ஐ வைரக்குமார் தலைமையில் ஏட்டு கார்த்திக் முதுநிலை ஏட்டு சத்தியராஜ் மற்றும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று பிடித்தனர் அவர் பிபி குளம் மருதுபாண்டியர் நகர் பசும்பொன் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் வயது 21 என
தெரியவந்தது. மேலும் அவர் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் உறுதியானது அவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
