
ஆயுதத்துடன் பதுங்கியவர் கைது
மதுரை கீரைத்துறை போலீஸ் எஸ்ஐ மணிமாறன் தலைமையில் போலீசார் காமராஜர் புறம் ரயில்வே தண்டவாளம் பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது போலீசாரை கண்டவுடன் ஓடிய வாலிபரை விரட்டிப் பிடித்தனர் விசாரணையில் அவர் குமரன் குறுக்குத் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற மாட்டு மணி 37 என்பது தெரிய வந்தது இவர் எதிரிகளை கொலை செய்யும் திட்டத்தின் வாளுடன் பதுங்கி இருந்ததாக தெரிவித்தார் இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் வாளையும் பறிமுதல் செய்தனர்.
