
மதுரை வில்லாபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை குடிபோதையில் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்
கடந்த 16ஆம் தேதி மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வில்லாபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ, மற்றும் இருசக்கர வாகனங்களை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுதினர் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் வந்து புகார் செய்ததின் பேரில்
அவனியாபுரம் காவல் நிலைய குற்ற எண் 164 /2025 u/s 191(2) , 324 (4) BNS. & 3 (1) of TNPPDL. act ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்தது
இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தனிப்படைக் காவல் துறையினரின் விசாரணை செய்து வந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த அன்புராஜ் என்பவரது மகன் வீரபாண்டி வயது 25 மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவை சேர்ந்த சீனிவாச பெருமாள் மகன் சூர்யா வயது 22 ஆகியோரை காவல்துறை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டபோது அதில் வீரபாண்டி சூர்யா ஆகியோர் காவல்துறையினரிடமிருந்து தப்பித்து பாழடைந்த வீட்டிற்கு அருகே இருந்த சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து தப்பிக்க முயற்சி செய்தபோது வீரபாண்டிக்கும் சூர்யாவிற்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர்கள் இருவரையும் மருத்துவ சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுப்பி வைத்து நீதிமன்றம் மூலம் காவல் அடைப்பு செய்தும் இவ் வழக்கில் மேலும் இரண்டு இளம் சிறார்கள் கூர்நோக்கு இல்ல பாதுகாப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
