Police Department News

மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் வீட்டின் ஒத்தி பணத்தை தரமறுத்தவர் கைது

மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் வீட்டின் ஒத்தி பணத்தை தரமறுத்தவர் கைது

மதுரை, கரிமேடு, C5, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான, ஆரப்பாளையம், கண்மாய் கரை ரெயின்போ சந்து ராஜா தெருவில் வசித்து வரும் இளங்கோவன் மனைவி, காளீஸ்வரி வயது 38/2020, இவர் கடந்த 9 மாதங்களாக தனது குடும்பத்துடன் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறார், இவரின் கணவர் இளங்கோவன் அவர்கள் சென்னையில் நம்பிவிலாஸ் என்ற ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

காளீஸ்வரி, கடந்த 29/01/2019 தேதி முதல் 01/01/2020 தேதி வரை மதுரை, நாகமலை புதுக்கோட்டை, திருவேணி நகர் பகுதியில் வசிக்கும், தங்கமுத்து மகன் சின்னச்சாமி வயது 53, அவர்களுக்கு மதுரை ஆரப்பாளையம் மெய்யப்பன் 1 வது தெருவில் குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கப்பட்ட D.No.9/17, என்ற வீட்டில் ரூபாய் 2,00,000/−க்கு ஒத்திக்கு இருந்து வந்துள்ளார், அதற்காக சின்னச்சாமியும், காளீஸ்வரியும் அரசு முத்திரையிட்ட 20 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்,

கடந்த 25/08/2019 ம் தேதி சின்னச்சாமி அவர்களின் மனைவி சுந்தரேஸ்வரி அவர்கள், காளீஸ்வரி வீட்டிற்கு வந்து மேலும் 50,000/− ரூபாய் பணம் பெற்று சென்றுள்ளார். அதன் பிறகு குடிசை மாற்று வாரியத்திலிருந்து சின்னச்சாமியின் இந்த வீட்டை இடிக்கப் போவதாக Notice ஒட்டிச் சென்றுள்ளனர்.
இதனால் காளீஸ்வரி, சின்னச்சாமி மற்றும் அவரது மனைவி சுந்தரேஸ்வரி ஆகியோரிடம் ஒத்திப் பணம் ரூபாய் 2,50,000/−ஐ திருப்பி தருமாறு கேட்டதற்கு ஏதாவது சாக்கு போக்கு சொல்லி நம்ப வைத்து பணத்தை தராமல் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வந்துள்ளார்கள். கடந்த ஜனவரி மாதம் காளீஸ்வரி குடியிருந்த, சின்னச்சாமியின் வீட்டை காலி செய்து தற்போதுள்ள வீட்டில் குடிபோயுள்ளனர். இந்நிலையில் 09/12/2019−ம் தேதி காலை 08.15 மணிக்கு காளீஸ்வரியும் அவரது கணவரும் சம்பவ இடம் அருகே அவர்களது சொந்த வேலையாக நடந்து வந்த போது எதிரே TN 58 AQ 6464 என்ற Royal Enfield இருசக்கர வாகனத்தில் வந்த சின்னச்சாமியிடம் காளீஸ்வரியும், அவரது கணவரும் ஒத்திப்பணத்தை திருப்பி கேட்டபோது சின்னச்சாமி, காளீஸ்வரியின் கணவரை பார்த்து பணமெல்லாம் தரமுடியாதுடா தேவடியா மகனே, முடிஞ்சத பாத்துக்கோ, பணம் கேட்டு வந்தா உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டியதாகவும் தாங்களிடம் ஒத்திப் பணத்தை வாங்கிகொண்டு நம்ப வைத்து மோசடி செய்து ஏமாற்றி பணத்தை திரும்பி கேட்டதற்கு அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த சின்னச்சாமி, மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களிடம் காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கனம் காவல் ஆணையர் அலுவலகம் C.No.292/Camp.PG/COP−MC/2020−ன் படி வரப்பட்ட தபாலை பார்வையிட்டு தொடரப்பட்ட வழக்கு.

மேற்படி வழக்கில், ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் உத்தரவின்படி, சார்பு ஆய்வாளர் திரு.M.சுந்தரபாண்டியன் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் 406, 420, 294(b), 506(i) பிரிவின்படி வழக்கு பதிவு செய்து, எதிரிகளை விசாரணை செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து, நீதி மன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.