
சிவகிரியில் காரில் கஞ்சா கடத்திய பிரபல கஞ்சா ரவுடி கார்த்திக் அதிரடி கைது.
தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் உத்தரவிட்டதை அடுத்து புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன் அவர்கள் மேற்பார்வையில் சிவகிரி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் சார்பு ஆய்வாளர் வரதராஜன் மற்றும் போலீஸார் சகிதம் தென்காசி To மதுரை ரோட்டில் வாகன தணிக்கைசெய்தனர் அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த கேரளா பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரை ஓட்டி வந்த சிவகிரியை சேர்ந்த பூலித்துரை மகன் காசித்துரை என்ற கார்த்திக் ஓட்டி வந்த காரில் சுமார் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இவர் மீது 10 க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்கு மற்றும் வழிப்பறி வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
