Police Department News

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ரோடு திட்டம்

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ரோடு திட்டம்

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ஒரு ரோடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி நேதாஜி ரோடு( கே. பி. எஸ்., ரவுண்டானா முதல் முருகன் கோவில் வரை) டி. பி. கே ., ( கே. பி. எஸ்., ரவுண்டானா முதல் ஜம்ஜம் வரை) டவுன்ஹால் தெற்கு மாசி (விளக்கத்தூண் முதல் மறவர் சாவடி டி எம் கோர்ட்) மேலமாசி வீதி தெற்காவணி மூல வீதி கீழமாசி வீதி ( லெமன் மார்க்கெட் அம்மன் சன்னதி விளக்கத்தூண் சந்திப்பு வரை ) மேலாவணி முதல் தெரு மேலமாசி வீதி வடக்கு மாரட்டு வீதி (மே பிளவர் சந்திப்பு முதல் மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பு முதல் தளவாய் தெரு சந்திப்பு) என 12 ரோடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்த ரோடுகளில் ஆக்கிரமிப்பு அகற்றி வாகனங்கள் தடையின்றி செல்லவும் சிரமமின்றி நடக்கவும் ஏற்பாடு செய்யப்படும் இந்த ரோடுகளில் வணிக நிறுவன உரிமையாளர்கள் வணிகப் பொருட்களை நடைபாதையில் குவித்து போக்குவரத்திற்கு இடையூறு செய்யாமல் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க மாநகர போலீசார் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.