
மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
மதுரை திருவாத வூரைச் சேர்ந்த ஐயம்பிள்ளை மகன் கார்த்திக் வயது 27 இவர் 2017ல் தத்தனேரி அருகே காரில் வந்த (டிஎன் 46 எம் 55 77 ) போது அந்த காரை போலீசார் சோதனை இட்டனர் காரில் 225 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றிய போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்
இந்த வழக்கு மதுரை செல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணை நடந்து வந்தது விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இவருக்கு 10 ஆண்டு கடும் காவல் மற்றும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹர குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் திறமையாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த செல்லூர் காவல் துறையினரை போலீஸ் கமிஷனர் வெகுவாக பாராட்டினார்
