
மதுரையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து மரக்கன்றுகள் வழங்கி தூய காற்று பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு
மரங்கள் மூலமாகவே மக்களுக்கு இயற்கை அன்னை இலவசமாக ஆக்சிஜனை வழங்கி வருகிறார். ஆனால் காலத்தின் கட்டாயத்தில் மரங்கள் பெரும்பாலும் மனிதர்களால் வெட்டப்பட்டு இயற்கையான தூய்மையான காற்று மக்களுக்கு கிடைப்பதில் இன்னல் ஏற்பட்டு வருகிறது. இந்நிகழ்வு தொடர்ந்தால் நமது வருங்கால சந்ததியினர் தூய காற்றை காசு கொடுத்து வாங்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத நிலையாகி விடுவது உறுதி இதனை கருத்தில் கொண்டு மனிதர்கள் தங்களின் பிறந்தநாள் திருமண நாட்கள் மற்றும் தன்னுடைய மூதாதையர்களின் நினைவு தினங்களில் ஒவ்வொருவரும் மரங்கள் நட்டும் பொது மக்களுக்கு மரக்கன்றுகளை தானமாக வழங்கியும் தூய்மையான காற்று பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மதுரை மாநகர போக்குவரத்து காவலர்கள் பொது மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் நேற்று மதுரையில் பார்வை பவுண்டேஷன், இளம் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சோழன் குபேந்திரன் ஆகியோர்களுடன் இணைந்து மதுரை மாநகர மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் திலகர், விஸ்வநாதன், சிறப்பு சார்பாய்வாளர் அழகர்சாமி, தலைமை காவலர் மதன் ஆகியோர் இணைந்து மதுரை சர்வேயர் காலனி போக்குவரத்து சிக்னல் அருகே பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கி தூய காற்று பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திதோடு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் துணிப்பைகளை பயன்படுத்த வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
