நெல்லை மாவட்டம் உவரியில் ரேஷன் அரிசி கடத்திய பெண் கைது, உவரி போலீசாரின் அதிரடி நடவடிக்கை
நெல்லை மாவட்டம் உவரி நேதாஜி தெருவை சேர்ந்தவர் அலங்காரம்.இவருடைய மனைவி விணோனி வயது 41 இவருடைய வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக உவரி போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி அவர்கள் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் உவரி போலீஸார் அங்கு சென்று தீடீர் சோதனை நடத்தினர் அப்போது 295 மூட்டைகள் சுமார் 15 டன் எடை உள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி குழந்தைசாமி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகளை லாரி மூலம் வள்ளியூர் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.விசாரணையில் விணோனி குடும்ப அட்டை காரர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் அரிசியை 5 ருபாய்க்கு வாங்கி அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.இவர் மீது ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
