
மதுரையில் சித்திரை திருவிழாவின் போது தண்ணீர் பீச்சி அடிக்க தடை செய்த பிரஷர் மிஷின்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை மதுரை மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை
மதுரையில் சித்திரை திருவிழாவில் எதிர்சேவை, கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது தடை செய்யப்பட்ட பிரஷர் மெஷின்கள் மூலம் தண்ணீர் பீச்சி அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர் காவல் துறை எச்சரித்துள்ளனர்.
இது சம்பந்தமாக போலீசார் கூறியிருப்பதாவது சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 29 ம் தேதி முதல் துவங்கி நடக்கிறது. மே 11 இல் தல்லாகுளத்தில் எதிர்சேவை, மே 12 ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது சுவாமியே வரவேற்கும் பக்தர்கள், தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி அதில் துடுப்பு இணைத்து பாரம்பரிய முறையில் தண்ணீர் பீய்ச்சி தீர்த்தவாரி செய்வார்கள்
சில ஆண்டுகளாக பக்தர்கள் துடுப்புடன் சிறிய அளவிலான பிரஷர் பம்புகளை இணைத்து தண்ணீரில் வேதிப்பொருள், திரவியங்கள், கலர் பொடிகளை கலந்து பீச்சி சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர்
பெண்கள் குழந்தைகள் மீது வேண்டுமென்றே தண்ணீர் பீச்சி சிரமம் ஏற்படுத்துவதாக புகார்கள் எழுவதால் அதற்கு தடை விதிக்கப்பட்டது
இது தொடர்பாக உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுப்படி கள்ளழகருக்கு தீர்த்தவாரி மூலம் நேர்த்திக்கடன் செலுத்த விரும்புவோர் பாரம்பரிய முறையில் ஆன தோல் பைகளில் சுத்தமான தண்ணீர் நிரப்பி சிறிய குழாய் பொருத்தி மற்றும் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாதவாறு நேர்த்திக் கடனை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை மீறி சிறிய குழாய்களால் ஆன பிரஷர் கருவிகளை விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சிறிய ரக 22 பிரஷர் பம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவே தண்ணீர் பீச்சி அடிப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
