
தென்காசி மாவட்டம் சிவகிரி தேவிபட்டினத்தை சேர்ந்த ரவுடி கலைச்செல்வன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கடந்த மாதம் தேவிபட்டினம் பகுதியில் கஞ்சா சம்மந்தமாக ரைடு செய்யும் போது தேவிபட்டினம் ஊரை சேர்ந்த வேல்சாமி மகன் கலைச்செல்வனிடம் சோதனை செய்ததில் அவரிடமிருந்து இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தடை செய்யப்பட்ட கஞ்சா பொருளை லாப நோக்கத்துடன் விற்பனை செய்ய வைத்திருப்பதாகவும் இளைஞருடைய வாழ்வுகளை சீரழிக்க பயன்படுத்தியதாகும் தெரியவந்தது இவரை கைது செய்து நீதிமன்ற தகவல் அனுப்பப்பட்டு தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அரவிந்த் அவர்களின் பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சியர் திரு. கமல் கிஷோர் அவர்களின் உத்தரபடி சிவகிரி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் எதிரி கலைச்செல்வனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
