
தாம்பரம் மாநகர போலீசாரின் துரிதநடவடிக்கையால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு
தாம்பரம் போலீசாரின் துரித நடவடிக்கையால் ரூபாய் 70 லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளை அடித்த நபரை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு
கடந்த ஜூன் 28 .6 .2025 அன்று சிட்லப்பாக்கத்தை சேர்ந்த ஒருவர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் தனது மகளின் வீட்டிற்கு சென்றிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தனது பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 90 பவுன் தங்க நகைகள் 1 வைர நெக்லஸ் 2 வைர வளையல்கள் மற்றும் 750 கிராம் வெள்ளி பொருட்களைத் திருடிச் சென்றதாகவும் திருடப்பட்ட சொத்து மதிப்பு ரூ.70,00,000 லட்சம் என கூறியிருந்தார்.
அந்த தகவலின் படி பெரும்பபாக்கம் காவல் நிலைய குற்ற எண் :241/2025/U/s 331/(4) 305(a)BNS கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படை குழுவினர் குற்றம் நடந்த இடத்தை முழுமையாக ஆய்வு செய்து. கைரேகைகளை சேகரித்து, சந்தேக நபர்கள் மற்றும் முன்னாள் குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்து குற்றம் நடந்த இடத்திலும் அதைச் காணப்பட்ட 100க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் சந்தேக நபர்களின் விவரங்கள் சேகரித்து மேலும் குழு கடுமையாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு சம்பவ நடந்த இடத்திற்கு அருகில் சுற்றி திரிந்த ஒரு ஆட்டோவை கன்காணித்தும் இறுதியாக குற்றம் ஈடுபட்ட ஆரோக்கியராஜ் A/46,s/o,P. கோதண்டராமன், எண்,3/999, கன்னி நகர் கோயில், 4,வது, தெரு, சிட்லப்பாக்கம், 30.06.2025 அன்று காலை 9:15 மணி அளவில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு திருடப்பட்ட சொத்து 90 பவுன் தங்க நகைகள், 1 வைர நெக்லஸ், 2 வைர வளையல்கள் மற்றும் 750 கிராம் வெள்ளி பொருட்களை அடையாளம் காட்டி எடுத்து ஆஜர் இதன் மதிப்பு சுமார் ரூ.70,00,000 மேலும் அவர் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் முன் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
