
திண்டுக்கல்லைச் சேர்ந்த உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டி மதுரை மாநகர காவல் துறையின் உதவியுடன் முதியோர் இல்லத்தில் சேர்ப்பு
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த உறவினர்களால் கைவிடப்பட்ட திருமதி. மல்லிகா 52/25, என்ற மூதாட்டியை, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் நேதாஜி ஆம்புலன்ஸ் உரிமையாளர் உதவியுடன் உத்தங்குடி “ரோஜாவனம்” முதியோர் இல்லத்தில் காவல் கரங்கள் மூலமாக சேர்க்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய காவல் ஆணையர் அவர்கள் மற்றும் காவல் கரங்கள் அமைப்பை சேர்ந்த காவலர்களின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
