
மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த தலைமைக் காவலர்
22.12.2019-ம் தேதியன்று இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் திரு.சுபாஷ் சீனிவாசன் அவர்கள், மாவட்ட
ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு காலில் காயம் பட்ட நிலையில் சுற்றித்திரிந்த பெண்ணை கண்டதும் அவரை மீட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் உணவு உண்ணவும் வழிவகை செய்தார். இவரின் இச்செயலை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் தலைமை காவலரை வெகுவாக பாராட்டினார்