Police Department News

விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க உதவிய நபருக்கு போக்குவரத்துக் காவல் துணைய ஆணையர் பாராட்டு

விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க உதவிய நபருக்கு போக்குவரத்துக் காவல் துணைய ஆணையர் பாராட்டு

கடந்த 08.09.2025 அன்று நண்பகல் மதுரை அண்ணா நகரில் உள்ள சினி பிரியா தியேட்டர் அருகில் முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நேரம் அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி சென்று விட்டது சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது அந்த நேரம் அங்கு நின்றிருந்த சமூக அக்கறை உள்ள முருகேசன் என்ற நபர் நடந்த சாலை விபத்திதை புகைப்படம் எடுத்துள்ளார் அதை அப்பொழுது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் திரு.சுரேஷ் அவர்களிடம் கொடுத்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிய உதவினார். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிய காவல்துறைக்கு உதவி புரிந்த திரு. முருகேசன் என்பவரை காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.