எஸ்.ஐ. யை தாக்க முயன்றவர் கைது.
ஆரோவில் அருகே சப் இன்ஸ்பெக்டரை திட்டி, தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் நேற்று பொம்மையார்பாளையம் இ.சி.ஆர்., சாலையில் வாகன தணிக்கை செய்தார்.
அப்போது, பைக்கில் வந்த நபரை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை திட்டி, தாக்க முயன்றார்.
உடன், அங்கிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் பசுபதி என்கிற பச்சையப்பன், 26; என தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.