கேணிக்கரை காவல் நிலைய குற்ற எண்: 479/19 u/s 147, 148, 341, 294(b), 506(ii) IPC @ 147, 148, 341, 294(b), 506(ii), 341, 120(B) IPC and 25(1), (a) Arms Act 1959 என்ற குற்ற வழக்கின் எதிரிகளான 1) அருண் @ அருண்குமார் 24/19, த/பெ ராமு, MSK நகர், இராமநாதபுரம், 2) தயா தயாநிதி 21/19, த/பெ பாலசுப்பிரமணியன், வீரபத்திரசாமி கோவில் தெரு, இராமநாதபுரம் ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் பேரில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இதன்படி, கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரபு அவர்கள் 29.01.2020-ம் தேதி மேற்படி எதிரிகளான அருண் @ அருண்குமார் மற்றும் தயா தயாநிதி ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.