அரியலூர் லட்சுமி விலாஸ் வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சியில் லாக்கரை உடைக்க முடியாததால் பலகோடி ரூபாய் மதிப்பிலான் பணம் நகைகள் தப்பின.
3 நாள் வங்கி விடுமுறைக்குப் பின் இன்று வங்கியைத் திறக்க வந்த மேலாளர் கேட்டின் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து போலீசார் வந்தபோது வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு கொள்ளையர்கள் நுழைந்தது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்திய போலீசார், வங்கியின் சி.சி.டி.வி.யையும் ஆய்வு செய்தனர். வட மாநிலத்தவர் அல்லது வங்கி ஊழியர்கள் எவருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.