இராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.
உச்சிப்புளி காவல் நிலைய குற்ற எண்: 12/2020 294(b),336, 332, 307 IPC என்ற குற்ற வழக்கின் எதிரி கணேசமூர்த்தி @ கணேசன் 22/20, த/பெ ராமு, வெள்ளமாசிவலசை, நாகாச்சி, இராமநாதபுரம். என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் பேரில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இதன்படி, உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளர் திரு.முத்துபிரேம்சந்த் அவர்கள் 19.02.2020-ம் தேதி மேற்படி எதிரி கணேசமூர்த்தி கணேசன் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.