குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த உதவி ஆய்வாளர்.
பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவரின் தந்தை இறந்துவிட்டதால் குடும்ப சூழ்நிலை காரணமாக பத்தாம் வகுப்பை இடையிலே விட்டு கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் மாணவனிடம் கல்வியின் சிறப்பினை எடுத்துக் கூறி அம்மாணவனை பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்.