பாண்டி விஷ சாராயம் கடத்திய இருவர் கைது மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நான்குசக்கர வாகனம் பறிமுதல்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்களின் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் சரகம் கொடைவலாகம் மதுகடிப்பட்டு அருகே அருகே மயிலாடுதுறை மதுவிலக்கு தனிப்படை பொலிஸார் வாகன சோதனை மேற்கொண்டபோது அவ்வழியே வந்த நான்குசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தரங்கம்பாடி கோடங்குடியை சேர்ந்த மகாலிங்கம் மகன் ஜெயகாந்தன் (35) மற்றும் மேற்கண்ட அதே பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை மகன் மகேந்திரன் (37) ஆகிய இருவரும் TN 07 AB 2259 ஆகிய நான்குசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 550 லிட்டர் பாண்டி விஷ சாராயம் இருந்தது கைப்பற்றப்பட்டது மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நான்குசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் மேலும் இது போன்ற குற்றவாளிகள் நடைபெற வண்ணம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இ கா ப அவர்கள் தெரிவித்துள்ளார்.