கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தனது இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை வெட்டி வீழ்த்தியது. அவரை சாலையில் ஓட ஓட விரட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றது தகவல் அறிந்து வந்த காவல்துறை உடலை கைபற்றி தனிப்படை அமைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
