ஆட்டோ டிரைவரின் அசத்தலான செயல்..!
ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பாராட்டிய காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார்.
காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கலைஞர் என்பவர் 04.03.2020 தனது ஆட்டோவில் பயணி ஒருவர் தவறவிட்ட மணி பர்சை கண்டு அதனை சோதனை செய்ததில் அதில் ரூ 32,500/-மற்றும் அடையாள அட்டை இருப்பதை பார்த்து உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் நிலைய SI திரு. சரவண போஸ் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்த செயலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுந்தர மகாலிங்கம் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் அதில் இருந்த அடையாள அட்டையை கொண்டு அதன் உரிமையாளரிடம் மணி பர்சை ஒப்படைக்க போலீசார் தேடி வருகின்றனர்.