தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது..!!
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ.செல்வநாகரத்தினம்.இகாப அவர்களின் பரிந்துரையின் பேரில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவுபடி தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவோர் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த வெளிப்பாளையம் காவல் சசரகத்திற்கு உட்பட வண்டிப்பேட்டையை சேர்ந்த வீரையன் மகன் சிவன்பாண்டி (31) என்பவர் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் இவர்கள் மீது மது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்புக்காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் மேலும் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.