எண்ணூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பெண்கள் உட்பட 4 நபர்களை கைது செய்து 12 கிலோ கஞ்சா மற்றும் 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்த எண்ணூர் சரக உதவி ஆணையாளர் தலைமையிலான போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும்,சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் அதிகரித்து கண்காணித்தல் மற்றும் அதிகளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கோள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக எண்ணூர் சரக உதவி ஆணையாளர் திரு.K.R.உக்கிரபாண்டியன் அவர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் (18.03.2020) அன்று மதியம் சுமார் 2:00 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்து போது, தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் எண்ணூர், கமலம்மாள் நகர் பகுதியில் கண்காணித்த போது அங்கு 3 பெண்கள் உட்பட 4 நபர்கள் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன் பேரில் மேற்படி இடத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 1. பார்வதி (31), 2. வினோத் (32), 3. அலமேலு (26, 4. மாதவி (37), ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா மற்றும் 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
எண்ணூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 குற்றவாளிகளை கைது செய்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த எண்ணூர் சரக உதவி ஆணையாளர் திரு.K.R.உக்கிரபாண்டியன், எம்-5 எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.C.புகழேந்தி, உதவி ஆய்வாளர்கள் திரு.J.கணேஷ், திரு.G.கருணாகரன், இரண்டாம் நிலைக்காவலர்கள் திரு.R.ராஜேஷ்குமார், (கா.எண்.37820) திரு.R.ரஞ்சித் (கா.எண்.43563) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் (19.03.2020) அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.