கொருக்குப்பேட்டை இரயில்வே காவலர்கள் கொரோன வைரஸ் பற்றி விழிப்புணர்வு…
இன்று காலை 09.00 மணிக்கு கொருக்குப்பேட்டை இரயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளுக்கு சென்னை பெருநகர மாநகராட்சி கொருக்குப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மற்றும் GRP கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் இணைந்து பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை நடத்தப்பட்டது.
◆ வீட்டைவிட்டு வெளியே போய்ட்டு வந்தால் சோப்பு போட்டு கைகளைக் கழுவுங்கள். வெளியில் செல்வோர் சானிடைசர் வைத்து கைகளை சுத்தம் செய்யலாம்.
◆ நம்முடைய கைகளை சுத்தமாக வைப்பதன் மூலம் முகம், கண்கள், வாய், மூக்குப் பகுதிகளுக்குத் கைகள் மூலம் தொற்று பரவுவதைத் தவிர்க்க முடியும்.
◆ வெளியே மக்களை சந்திக்கும் பணியில், சூழலில் உள்ளவர் மாஸ்க் அணியலாம். அனைவரும் அணியதேவையில்லை என்று அரசு கூறியுள்ளது. மாஸ்க் அணிவதால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கலாம் என்று மாஸ்க்கை மட்டுமே நம்பிக் கொண்டு இருக்காமல் தனிநபர் சுத்தத்தை கடைபிடிப்பது மிக அவசியம். மாஸ்க் அணிந்தாலும் N95 மாஸ்க் மட்டுமே ஓரளவுக்கு நன்மை பயக்கும்.
◆ கொரோனா பற்றிய வதந்திகள் பெருகிக் கொண்டே இருப்பதால், தேவையில்லாத வதந்திகளை நம்புவதையும், பரப்புவதையும் தவிர்ப்பது நல்லது என்று விழிப்புணர்வு செய்தனர்.