Police Department News

பெண் ஊழியரை தாக்கி நிர்வாணமாக வீடியோ பதிவு செய்த துப்பறியும் நிறுவன உரிமையாளர் கைது

பெண் ஊழியரை தாக்கி நிர்வாணமாக வீடியோ பதிவு செய்த துப்பறியும் நிறுவன உரிமையாளர் கைது

மதுரை மாநகர், தல்லாகுளம் D.1. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான அய்யர் பங்களாவில், ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த பிரேம் குமார் மகன் கனேஷ் ஆனந்து (28) என்பவர் ஸ்பைடர் டிடக்டிவ் ஏஜென்ஸி என்ற பெயரில் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார், அந்த நிறுவனத்தில், செல்லூர், சுயராஜ்யபுரம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் தனியாக இருக்கும் போது நிறுவனத்தை நடத்தி வரும் கனேஷ் ஆனந்த் மேற்படி இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தபோது, அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரை கட்டையால் அடித்தும், ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி வீடியோபடம் பிடித்து மிரட்டியதாகவும் தெரிகிறது,உடனே அந்த பெண் அந்த பகுதிக்குறிய D.1 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், இந்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் திரு மலைச்சாமி அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் 294,323,354 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தும், மேலும் அவரது மொபைல் போன், கம்யூட்டர் ,சிசிடிவி பதிவு ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

இதற்கு முன் அந்த பெண்ணிற்கும், அவரது கணவருக்கும் சற்று கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், கனேஷ்ஆனந்து அந்த பெண்ணின் வீட்டிற்க்கு சென்று சரி செய்ய முயற்சித்தபோது இவருக்கும் அந்த பெண்ணின் கணவருக்கும் தகறாறு ஏற்ப்பட்டு அந்த பகுதிக்குறிய செல்லூர் D.2. காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் கணவர் மீது புகார் அளித்துள்ளார், இதுவும் விசாரணையில் உள்ளது.

போலீஸ் இ நியூஸ்
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.