மதுரை திருப்பரங்குன்றம்,முத்துப்பட்டியை சேர்ந்த கொத்தனார் மர்மக் கொலை.
மதுரை, சுப்பிரமணியபுரம் C.2. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான திருப்பரங்குன்றம், முத்துப்பட்டியில் வசித்து வருபவர் திராவிடச் செல்வம் வயது 42, இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், பிரியா என்ற மகளும், சிவச்சந்திரன் என் மகனும் உள்ளனர், சம்பவத்தன்று இவர் மதுரை பைகரா, ரயில்வே கேட்டுக்கு அருகில் பெட்ரோல் பல்க் பின்புறம் மர்மமான முறையில் ரத்தக் காயங்களுடன் கொலையுண்டு பிணமாக கிடந்தார், தகவல் அறிந்த தடய அறிவியல் துறை உதவி கண்காணிப்பாளர் கண்ணன் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார், மேலும் சுப்பிரமணியபுரம் C 2 காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் கலைவாணி அவர்களின் உத்தரவின் பேரில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர், இவர்களின் முதல் கட்ட விசாரணையில், திராவிடச்செல்வம் மது பழக்கம் உள்ளவர் ஆகையால் மது அருந்தும் இடத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மது அருந்தி இருக்கலாம் என்றும், பின் அவர்களுக்குள் வாய் தகறாறு ஏற்பட்டு கொலையில் முடிந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர், இருந்த போதிலும், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும் , தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் இ நியூஸ்
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி