



கம்பம் போக்குவரத்து காவல் துறை மற்றும் அன்பு அறம் செய் அமைப்பு இணைந்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து காவல்துறை மற்றும் அன்பு அறம் செய் அமைப்பும் இணைந்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன ஓட்டிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கினர்.
சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை விதிகளை பின்பற்றியும் தலைகவசம் அணிந்தும் செல்பவர்களுக்கு அரசு மருத்துவமனை முன்பாக கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலவன் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்கள் கார்த்திக்ராஜா, சக்கப்பன் சங்கமம் அறக்கட்டளை சுரேஷ்குமார், அன்பு அறம் செய் அமைப்பின் அன்புராஜா, ஆகியோர் மரக்கன்றுகள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சாலையில் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவரை கண்டறிந்து அவர்களை தலைகவசம் அணிந்து செல்லுமாறு அறிவுருத்ப்பட்டது.
