விருதுநகர் மாவட்டம்:-
உண்ண உணவு இல்லாமல் இருந்த பெரியவர்க்கு உண்பதற்கு உணவும், முககவசமில்லாத பெண்ணிற்கு முககவசம் வழங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் …
அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
எப்போதும் அதிகாலை வேளையில் காக்கும் காவல் பணிக்கு அவருக்கு வழங்கப்பட்ட பணிக்கான இடத்திற்கு சென்றுவிடுவார்.
வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக சென்ற பெரியவரை பார்த்தார்.
அந்த வயதில் பெரியவரின் அருகில் சென்று முதலில் கேட்டது சாப்டீங்களா என்று கேட்டார் இல்லை என்றதும் அவருக்கு காலை உணவை வாங்கி கொடுத்தார் அத்துடன் முககவசமும் கொடுத்து அனுப்பினார்.
மற்றொருபுறம் வயதான பெண்மணி ஒருவர் சென்றார் அவரையும் அழைத்து எங்கே செல்கிறீர்கள் விபரம் கேட்டறிந்து அவருக்கு முககவசம் வழங்கி அனுப்பி வைத்தார்.
திருக்குறள்:-
ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்
விளக்கம்:- செய்யக்கூடிய வகையால் எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்யவேண்டும் என்பதன் விளக்கமாகும்.
திரு.ராமமூர்த்தி அவர்களின் பணிகள் மென்மேலும் மிளிர போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது.