மக்களின் நலன் காப்பதே எங்களின் பணி..! பொதுமக்களுக்கு உதவி வரும் டிஎஸ்பி ரமேஷ்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கிவரும்
டிஎஸ்பி ரமேஷ்.
இன்று கொரனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது,
இதில் ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர், முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோரனா வைரஸ் எச்சரிக்கை.
இங்கிருந்து வெளிநாடு செல்பவர்களும் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்புவர்களும் தங்களது உடல் நிலையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், மற்றும் தனிமை படுத்தி கொள்ளவேண்டும்.
உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல், இருமல், மூக்கில் சளி ஓழுவுதல் போன்ற தொந்தரவு இருப்பவர்கள் முடிந்தவரை வெளியில் பயணங்களை தவிர்க்க வேண்டும்.
இருமல்,தும்மல், மூக்கில் சளி ஒழுகுதல் போன்ற தொந்தரவு உள்ளவர்கள் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.
கைகளை அடிக்கடி சோப்பு போட்டு முறையாக கை கழுவுதல் வேண்டும்.
கை குலுக்குதல் தவிர்த்தல் வேண்டும்.
நோயின் அறிகுறிகள் இருக்கும் மக்களிடம் இருந்து தூர இருத்தல் வேண்டும்.
நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த விழிப்புணர்வு முகாம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்றது
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக செய்தியாளர் கும்மிடிப்பூண்டி சையது இப்ராஹிம்