தன்னுடைய அண்ணனின் நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய ரவுடி படுகொலை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், முதுவந்திடல் கிராமத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் முத்துகுமார் வயது 27, இவர் மதுரை அனுப்பானடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று, இவர் தன்னுடைய அண்ணன் செல்லப்பாண்டியின் 6 வது ஆண்டு நினைவஞ்சலி போஸ்டரை தன்னுடைய நண்பர்களுடன் அனுப்பானடிப் பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்தார், அப்போது கத்தி, அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் முத்துகுமாரிடம் தகராறு செய்து அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும், தெப்பகுளம் B3, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் முத்துகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல் உதவி ஆணையர் திரு. சூரக்குமார் அவர்கள் உத்தரவின்படியும், காவல் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி( I/C) அவர்களின் அறிவுறுத்தலின்படியும், சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம், 147,148, 294(b), 302, 506(ii) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகலான(1) டால்டா சரவணன் வயது 21, (2)செந்தில் என்ற ஓட்டையன் செந்தில் வயது 27, (3) சுரேஷ் என்ற பல்சுரேஷ் வயது 27, (4) மணி என்ற மணிகண்டன் வயது 25, (5) கண்ணன் என்ற என்ற புரோட்டா கண்ணன் வயது 28, (6) ஜெகதீஸ் வயது 33, ஆகிய ஆறு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் கொலைக்கான பின்னனி தெரிய வந்தது. இது பற்றி காவல் துறையினர் கூறியதாவது.
முத்துகுமாரின் அண்ணன் செல்லப்பாண்டிக்கு மேல அனுப்பானடியை சேர்ந்த அப்பாஸ்மணி என்பவர் கொலை வழக்கில் தொடர்புள்ளது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த செல்லப்பாண்டி சில நாட்கள் கழித்து அனுப்பானடி பகுதியில் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். தன்னுடைய அண்ணன் சாவுக்கு அவருடைய நண்பன் சத்தியாதான் காரணம் என்று முத்துகுமார் நினைத்து வந்தார். அதனால் அவர்கள் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையில் சத்தியாவை கடந்த 2015 −ம் ஆண்டு முத்துகுமார் வெட்டி கொலை செய்தார். அதன் பின்னர் அவர் சிறைக்கு சென்று வெளியில் வந்தார். இதற்கிடையில் சத்தியாவின் சாவிற்கு பழிக்கு பழி வாங்க அவரது நண்பர்கள் சிலர் காத்திருந்தனர். இந்த நிலையில்தான் முத்துகுமார் மேல அனுப்பானடி பகுதியில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தது எதிர் தரப்பினருக்கு தெரிய வந்தது அவர்கள் கும்பலாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துகுமாரை பழிக்குப் பழியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் ஆறு பேரையும் கைது செய்து நீதிபதியிடம் ஒப்படைத்து , அவர்களின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி