Police Department News

மதுரையில் காவல் துறையினரின், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தடுக்கப்பட்ட படுகொலை சம்பவம்

மதுரையில் காவல் துறையினரின், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தடுக்கப்பட்ட படுகொலை சம்பவம்

மதுரையில் கடந்த இரண்டு வருடங்களாக பழிக்கு பழி, மற்றும் முன் விரோதம் காரணங்களால் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதை தடுக்க மதுரை முன்னால் காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசிர்வாதம் அவர்கள் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார், இருந்த போதிலும் அவ்வப்போது பழிக்கு பழி கொலை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் வந்தன.

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த சின்ஹா அவர்கள் பழிக்குப் பழி நடக்கும் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக தனி படையினரை அமைத்துள்ளார். தனிப் படையினர் மதுரை மாநகரில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த கொலை வழக்குகள், கொலை முயற்சி, மற்றும் ரவுடிகளுக்கிடைய நடந்த கோஷ்டி சண்டைகள், குறித்து பல் வேறு விபரங்களை ரகசியமாக சேகரித்து வந்தனர். இந்த நிலையில் செல்லூர் மீனாம்பாள் புரம், சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த மதியழகன் மகன் மணிமுத்து என்ற பைனா மணி வயது 27/2020, மதுரை நரிமேடு சோணையார் கோவில் பகுதியை சேர்ந்த கருத்தக்கண்ணன் மகன் சேசு என்ற ஜெகதீசன் வயது, 37/2020 ஆகியோர் பயங்கர ஆயூதங்களுடன் கொலை செய்வதற்கான திட்டத்துடன் சுற்றி திரிவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அந்த இருவரையும் செல்லூர் D2, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்களின் தலைமையில், சார்பு ஆய்வாளர் D.ராஜா, மற்றும் தலைமை காவலர் சிதம்பரம், தலைமை காவலர் ரவி ஆகியோர் , செல்லூர் கட்டபொம்மன் நகர், குதிரைப் பாலம் சந்திப்பில் சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், மதிச்சியம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2014 ம் ஜெகதீசன் தனது நண்பர்கள் காட்டன் ஆறுமுகம், வேலு,முத்துகருப்பு ஆகியோர்களுடன் சேர்ந்து களவாணி நாகராஜன் என்பவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற போது அவர் வெட்டுக் காயமடைந்த அந்த நபர் உயிர் தப்பியதாக தெரிகிறது. அந்த நபர் தன்னை கொலை செய்து விடுவார் எனவும் அதிலிருந்து தப்பிக்க அவரை கொலை செய்யும் முயற்சியில் இருந்ததாகவும் தெரிய வந்தது.

காவல் துறையினரின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் நடக்கவிருந்த படுகொலை சம்பவம் தடுக்கப்பட்டது.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.