மதுரையில் இரண்டு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதல், 5 பேர் படுகாயம்
மதுரையில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே நடந்த மோதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை முனிச்சாலைப் பகுதியை சேர்ந்த வெள்ளைகாளி குரூப் ஆதரவாளர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த V.K.குருசாமி குரூப் ஆதரவாளர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக மோதல் ஏற்பட்டு 7க்கும் மேற்பட்டோர் படு கொலை செய்யப்பட்டனர். மேலும் இந்த கும்பல் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகர் தெப்பக்குளம் B3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான பாலரங்கபுரத்தில் மீண்டும் இந்த இரண்டு கோஷ்டிகளும் பயங்கர ஆயுதங்களுடன் கடந்த 24 ம் தேதி மோதலில் ஈடுபட்டனர். இதனால் 5 பேர் படு காயமடைந்தனர், தகவலறிந்த காவல் துறை உதவி ஆணையர் திரு. சூரக்குமார் அவர்கள் தலைமையில் சம்பவ இடத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டது, அதன் பிறகு, படுகாயமடைந்தோரை, அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர், மருத்துவ மனையில் ஏதும் அசம்பாவிதம் நடந்து விடாமலிருக்க மருத்துவ மனை வளாகத்திலும் போலீஸ் படை குவிக்கப்பட்டது.
மேலும் தெப்பக்குளம் B3, காவல் நிலைய ஆய்வாளர் கனேசன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. சிவராம கிருஷ்ணன் அவர்கள் IPC 147,148,294(B)323, 324, 307,506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள
M.அருள்ஜோதி
S.செளகத்அலி