மதுரையில் தாய் கண் எதிரே இரண்டு மகன்கள் வெட்டி படுகொலை
மதுரையில் முன் விரோதம் காரணமாக தாய் கண் எதிரே 2 மகன்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் SS காலனி C3, காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியான எல்லீஸ் நகரை சேர்ந்தவர் வெள்ளையத் தேவன். இவரது மகன்கள் முருகன் வயது 45,/2020, வெள்ளிக்கண்ணு செந்தில் வயது 40/2020, இவர்கள் பிரபலமான ரவுடிகள், இவர்கள் இருவரின் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை என பல் வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த 26 ம் தேதி தன்னுடைய உறவினர் முத்துப்பாண்டியின் இறப்பிற்கு சென்று விட்டு வந்து அண்ணன், தம்பி இருவரும் தன் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தனர், அப்போது சுமார் மாலை 5.30 மணியளவில் 10பேர் கொண்ட கும்பல் ஒன்று பயங்கரமான ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். திடீரென அந்த கும்பல் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கரமான் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது இதனை பார்த்த அவரது தாயார் கதறிக் கொண்டு வந்து தடுக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் அதனை கண்டுகொள்ளாமல் சரமாரியாக வெட்டி, அருகில் கிடந்த கல்லை எடுத்து இருவரது தலையிலும் போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
மாலை நேரத்தில் நடந்த இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தகவல் அறிந்த SS காலனி C3, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர் ஷீலா அவர்கள் மற்றும் கவலர்களுடன் விரைந்து வந்தனர். மேலும் காவல் துணை ஆணையர்கள் திரு.சிவபிரசாத், திரு. பழனிகுமார் உள்ளிட்ட அதிகாரிகளும், அங்கு வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர், பின்னர் போலீசார் அவர்கள் இருவரின் உடலையும் கைப்பற்ற முயன்றனர். அப்போது அவர்களின் தாயார் மற்றும் உறவினர்கள் கொலையாளிகளைப் பிடிக்கும் வரை இருவரது உடலையும் எடுக்க கூடாது, என்று தகராறு செய்தனர், இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் போலீசார் அங்கிருந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இறந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் C3, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பிளவர் ஷீலா அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. விஜயகுமார் அவர்கள் IPC 147, 148, 323, 324, 302, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கொலையாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி