மனித கடத்தல் தினம்
காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் மாவட்ட காவல்துறை,
சைல்டுலைன் 1098 மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின்
சார்பில் உலக மனித கடத்தல் எதிர்ப்பு தின நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சைல்டுலைன் 1098 திட்டத்தின் நோடல் இயக்குனர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதன்மை மேலாளர் மோகனவேல், காஞ்சிபுரம் மாவட்ட திட்ட மேலாளர் நம்பிராஜ், விஷ்னுகாஞ்சி காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் தாலுகா உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, சைல்டுலைன் 1098 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன் அனைவரையும் வரவேற்றார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான இலவச தொலைபேசி எண்கள் 1098, 181, 1091 ஆகிய எண்களின் பயன்கள் குறித்தும்,
இந்த இலவச தொலைபேசி அழைப்புகளின் வாயிலாக எடுக்கப்படும் செயல்பாடுகள் குறித்தும், ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் பிரேம் ஆனந்த் எடுத்துரைத்தார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை கலந்து கொண்டு குழந்தைகளுக்கான விளம்பரப் பலகையினை வெளியிட்டு, மனித கடத்தல் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பேசினார். பயிற்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் வைஷ்ணவி, திட்ட மேலாளர்கள் சரவணன், சதீஷ் குமார், சிலம்பரசன், செவிலிமேடு பகுதி பிரதிநிதிகள், குழந்தைகள், பெற்றோர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக, மேலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
போலீஸ் இ நியூஸ். காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர்
ம.சசி