கொள்ளையடிக்கும் நோக்கில்,மதுரை,பாண்டி கோவில்,அம்மா திடல் அருகே பயங்கர ஆயுதங்களுடன், பதுங்கி இருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது
மதுரை, அண்ணாநகர், E 3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், காவல் ஆய்வாளர் திரு பூமிநாதன் அவர்களின் உத்தரவின்படி, 13/08/2020 அன்று காலை 9 மணியளவில் சட்டம், ஒழுங்கு சம்பந்தமான ரோந்து பணியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. ராஜு,
தலைமை காவலர் 1928 திரு. மதன்குமார், மற்றும் முதல் நிலை காவலர் 2525 திரு. அன்புவேல்,
முதல் நிலைக் காவலர் 3854, திரு. கதிர்வேல்,
ஆகியோர்கள் ஈடுபட்ட போது, வண்டியூர், ரிங் ரோடு, அம்மா திடல் கருவேல முட்புதர் அருகே ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் பெரிய வாள்,பெரிய வீச்சு அருவாள், மற்றும் கத்திகளுடன் கூட்டமாக சுற்றி உட்கார்ந்து மறைவாக அமர்ந்து ஏதோ சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததை கண்டு ரோந்து சென்ற காவலர்கள் அருகில் சென்று மறைந்து நின்று கவனித்த போது அவர்கள் அனைவரும் 13/08/2020 அன்று காலையில், ரிங் ரோடு ராஜா பெட்ரோல் பல்கிற்கு எடுத்து செல்லும் கலெக்ஷன் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்று சதி திட்டம் தீட்டி பேசி கொண்டிருந்தார்கள். உடனே அவர்களை காவலர்கள் சகிதம் சுற்றி வளைத்து பிடித்து , விசாரித்த போது அவர்கள், மேலமடையை சேர்ந்த
1) பிச்சை மகன் பிரகாஷ் வயது 18/2020,
2)ரவி மகன் பிரகாஷ் வயது 18,
3)பிச்சை மகன் மணிகன்டன வயது 18/2020,
4) பிச்சை மகன் பிரேம்குமார் வயது 21,
5) தண்ணான் மகன் கோபிநாத் வயது 17/2020,
6) மருதராஜ் மகன் விக்ரம் வயது 16/2020 என தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் கூட்டாளிகள் எனவும் அவர்கள் மீது பல வழக்குகள் இருப்பதாகவும், தாங்கள் தண்ணியடிக்க , ஜாலியாக செலவு செய்ய பணம் தேவை படுவதால் பெட்ரோல் பல்கிலிருந்து எடுத்துச் செல்லும் கலெக்ஷன் பணத்தை மொத்தமாக கொள்ளையடிக்க வேண்டும் என்று சதித் திட்டம் போட்டு மறைந்து உட்கார்ந்து இருந்ததாக சொன்னதன் பேரில் மேற்படி நபர்களை காலை 9.30 மணிக்கு அதே இடத்தில் வைத்து கைது செய்தனர்.
காவல் துறையினரின் இந்த நடவடிக்கையால், நடக்கவிருந்த மாபெரும் கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டது.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி