மதுரை கோ.புதூரில் 80 வயது மூதாட்டி தற்கொலை
மதுரை மாவட்டம், அண்ணாநகர் E.3, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான கோ.புதூர், மகாலெக்ஷிமி நகரில் வசித்து வருபவர் அமுதா வயது 45, இவரது கணவர் பாஸ்கர் சமையல் வேலை செய்து வருகிறார், இவர்களுக்கு முத்துமாரி என்ற மகள் ஒருவர் உள்ளார் இவர் எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறார்,
அமுதாவின் தாயார் முத்தம்மாள் வயது 80/2020 இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார், இவர் கோ.புதூர், ஐ.டி.ஐ செல்லும் சாலையின் எதிரில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார், இவரை அமுதா தன்னுடன் வந்து சேர்ந்து வசிக்கும்படி பல முறை கூறியும் அவர் வரவில்லை தனியாகவே வசித்து வந்தார். இந்த நிலையில் 07/08/2020 அன்று காலை 10 மணியளவில் முத்தம்மாள் வீட்டிற்க்கு பக்கத்தில் வசிக்கும் பாக்கியம் என்பவர் அமுதாவிடம் வந்து முத்தம்மாள் அவர்கள் தனக்கு தானே சேலையால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தார் என சொல்லவும், அமுதாவும் அவர் கணவரும் சென்று தன் அம்மா குடியிந்த வீட்டிற்கு வந்து தொங்கிக் கொண்டிருந்த தன் அம்மாவை பார்த்ததாகவும் சொன்னார், மேலும் தன் அம்மாவின் இறப்பில் சந்தேகம் ஏதும் இல்லை என கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையம் வந்து கூறினார்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி