Police Department News

தானியங்கி போக்குவரத்து சிக்னலை மதுரைமாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த சின்ஹா அவர்கள் திறந்து வைத்தார்கள்

தானியங்கி போக்குவரத்து சிக்னலை மதுரைமாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த சின்ஹா அவர்கள் திறந்து வைத்தார்கள்

சாலை விபத்துக்களை தடுக்கவும், அதிகமான வாகன ஓட்டங்களை கண்காணிக்கவும், மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு முறையை உறுதி செய்வதற்கும் சிந்தாமணி சாலை − ரிங் ரோட்டின் சந்திப்பில் சென்ற 28 ம் தேதி 17.30 மணியளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி போக்கு வரத்து சிக்னலை மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் திறந்து வைத்தார். பாதுகாப்பான முறையில் மேற்கண்ட சந்திப்பை கடப்பதற்கு பாதசாரிகளுக்கு வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக Public Announcement system பொருத்தப்பட்ட 7 புதிய கேமராக்களும் காவல் ஆணையர் அவர்களால் திறக்கப்பட்டுள்ளன. அந்த கேமராக்கள் 360 டிகிரி திசைகளில் சுழன்று சந்தேகத்திற்கு இடமான நபர்கள், மற்றும் வாகனங்களையும் கண்காணிக்கும், மதுரை மாநகரில் உள்ள அனைத்து முக்கிய போக்கு வரத்து சந்திப்புகளிலும், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் தொழில் முனைவோரின் முழு ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேலும் தொடரபடவும் உள்ளது,

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.