கடும் வெயிலில் கொரோனா விழிப்புணர்வு நீலாங்கரை போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் கண்ணா அவர்கள்.
மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் சென்னை ஆணையர் மதிப்பிற்குரிய மகேஷ்குமார்அகர்வால் I.P.S அவர்கள் உத்தரவுபடி அதிவேகமாக சென்னையில் கொரோனா பரவுவதையொட்டி
நீலாங்கரை E.C.R சாலையில் வாகன சோதனையில் வாகன ஓட்டிகளிடமும் திரு.ராஜேஷ்கண்ணா அவர்கள் நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் அரசு ஆணைப்படி மக்களின் நல்வாழ்விற்காக கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.வாகன ஓட்டிகளிடம் முககவசம் உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்றும் சரிபார்க்கபட்டு பின்னர் வாகனம் செல்லும் படி அனுமதிக்கிறார் திரு.ராஜேஷ் கண்ணா அவர்கள். சட்டத்தை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கிறார். விபத்து ஏற்படகூடாத வகையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறுகிறார். பெண்களுக்கான சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி விளக்கமாகவும் யோகா பயிற்சி பற்றியும் தெளிவாகவும் மரியாதையாகவும் கூறிவருகிறார். சாலையில் பசியோடு இருக்கும் முதியோர்களுக்கு சாப்பிட உணவு தன்னுடைய ஊதியத்தில் கொடுக்கிறார்.அதுமட்டுமின்றி தன்னுடைய குடும்பத்தையம் மறந்து காலில் வலியோடும் கடுமையான வெயிலிலும் மழையிலும் பொதுமக்களின் சேவையை தியாகமாக செய்து வருகிறார் என்று அப்பகுதியில் வாழும் மக்கள் கூறுகின்றனர் திரு.ராஜேஷ் கண்ணா அவர்களை.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக. T.பிரபு. & N.ஹரிஹரன்
தென்சென்னை மாவட்ட செய்தியாளர்கள்