Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் ஶ்ரீவைகுண்டம் பகுதியில் பிரபல ரவுடி முருகன் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் ஶ்ரீவைகுண்டம் பகுதியில் பிரபல ரவுடி முருகன் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ரவுடித்தனம் செய்து, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த, பல கொலை, கொள்ளை வழக்குளில் ஈடுபட்ட பிரபல ரவுடி முருகன் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தீவரமாக கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு தனிப்படைகள் அமைத்துள்ளார். இதன் விளைவாக சமூக விரோதிகள் பலர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் திரு. ஜோசப் ஜெட்சன் தலைமையில், ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முருகப்பெருமாள், தலைமை காவலர் திரு. குணசேகரன், காவலர் திரு. நாராயணசாமி, குரும்பூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. வெங்கடாச்சல பெருமாள், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் திரு. வேம்புராஜ், ஆனந்தராஜ், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் திரு. இளங்கோ ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நேற்று (29.08.2020) ரோந்து வந்தபோது பேட்மாநகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி ரவுடித்தனம் செய்து வந்த பல கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட ஸ்ரீவைகுண்டம், சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த தங்கையா மகன் முருகன் என்பவரை கைது செய்தனர்.

இந்த பிரபல ரவுடி முருகன் என்பவருக்கு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ரவுடி வரலாற்றுப்பதிவேடு உள்ளது. இவர் கடந்த 2015ம் ஆண்டு, இவரது மனைவியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, அதனை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், ஏரல் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், மொத்தம் 6 வழக்குகள் உள்ளன.
மேற்படி பிரபல ரவுடி முருகனை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்
M.அருள்ஜோதி

Leave a Reply

Your email address will not be published.